தமிழ் திரையுலகில் நடிகர் சசிகுமார் நடிக்கும் புதிய திரைப்படத்தின் பணிகள் சென்னையில் பூஜையுடன் தொடங்கியுள்ளன. இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கவுள்ளது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதிய கூட்டணியில் சசிகுமார்!
ஹரிஷ் சந்தோஷ் இயக்கும் இந்தப் படத்தில் சசிகுமார் கதாநாயகனாக நடிக்கிறார். அவருடன் ஸ்வாசிகா, நந்திதா ஸ்வேதா, அஞ்சலி நாயர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
‘நந்தா’, ‘மௌனம் பேசியதே’ போன்ற திரைப்படங்களைத் தயாரித்த அபராஜீத் பிலிம்ஸ் நிறுவனத்தின் கணேஷ் ரகு, இந்தப் புதிய படத்தைத் தயாரிக்கிறார்.
கோவையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு
சென்னையில் நடைபெற்ற பூஜையைத் தொடர்ந்து, நவம்பர் மாதம் முதல் கோவையில் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெறவுள்ளது. படத்தின் தலைப்பு, கதைக்களம் மற்றும் வெளியீட்டுத் தேதி குறித்த அறிவிப்புகள் இன்னும் வெளியாகவில்லை.
சசிகுமாரின் நடிப்பும் இளையராஜாவின் இசையும் இணையும் இந்தப் புதிய முயற்சி, தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது

.png)

