சென்னை: பிரபல இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் மற்றும் சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறன் ஆகியோரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கான அழைப்பிதழ் வழங்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, கலாநிதி மாறன் தனது குடும்பத்தினருடன் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து திருமண வரவேற்பு அழைப்பிதழை வழங்கினார். புதுடெல்லியில் நடைபெற்ற இந்தச் சந்திப்பின்போது, மணமக்களுக்கு பிரதமர் தனது வாழ்த்துகளைத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
முதல்வர் விஜய்க்கும் அழைப்பு
இதனைத் தொடர்ந்து, தமிழக முதலமைச்சர் விஜயையும் கலாநிதி மாறன் சந்தித்து, அனிருத் - காவ்யா திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்தார்.
திரையுலகம், அரசியல் மற்றும் தொழில்துறையைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்களுக்குத் திருமண வரவேற்பு அழைப்பிதழ்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
இசையமைப்பாளர் அனிருத் மற்றும் காவ்யா மாறனின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் திரையுலகப் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

.png)

