சினிமா

20 ஆண்டு நிறைவு: மகள் மற்றும் மகன் முன்னிலையில் மீண்டும் திருமணம் செய்து கொண்ட சூர்யா - ஜோதிகா!

top-news

சென்னை: தமிழ் சினிமாவுின் நட்சத்திர தம்பதிகளான சூர்யா மற்றும் ஜோதிகா தங்களது 20 ஆண்டுகால திருமண வாழ்க்கையை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளனர். இதைக் கொண்டாடும் வகையில், தங்களது மகள் மற்றும் மகன் முன்னிலையில் அவர்கள் இருவரும் மீண்டும் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

20வது ஆண்டு விழா: கடந்த 2006-ம் ஆண்டு பெற்றோர் சம்மதத்துடன் இவர்களது திருமணம் இந்து முறைப்படி நடைபெற்ற நிலையில், தற்போது 20 ஆண்டுகள் கழித்து கிறிஸ்துவ முறைப்படி மீண்டும் மோதிரம் மாற்றிக் கொண்டு தங்களது திருமண நாளைச் சிறப்பாகக் கொண்டாடியுள்ளனர்.

குடும்பத்தினர் பங்கேற்பு: இந்த நெகிழ்ச்சியான நிகழ்வில் இவர்களது அன்பு மகன் மற்றும் மகள் முன்னிலை வகித்ததுடன், நடிகர் கார்த்தி உள்ளிட்ட நெருங்கிய குடும்ப உறுப்பினர்களும் கலந்துகொண்டு சிறப்பித்துள்ளனர்.

வைரல் வீடியோ: ஜோதிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள இந்த மறுமணக் கொண்டாட்டத்தின் வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் பெரும் அன்பைப் பெற்று வைரலாகி வருகின்றன.