சினிமா

செக் மோசடி வழக்கு: நடிகர் விமலுக்கு பிறப்பிக்கப்பட்ட நிபந்தனை ரத்து - சென்னை ஐகோர்ட்டு உத்தரவு!

top-news

சென்னை: ரூ.4.5 கோடி காசோலை மோசடி வழக்கில் நடிகர் விமலுக்கு விதிக்கப்பட்டிருந்த வைப்புத் தொகை (டெபாசிட்) நிபந்தனையை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகர் விமல் தயாரித்து நடித்த 'மன்னார் வகையறா' திரைப்படத்திற்காகப் பெறப்பட்டக் கடனைத் திருப்பிச் செலுத்துவதில் ஏற்பட்ட நிலுவை காரணமாகத் தொடரப்பட்ட காசோலை மோசடி வழக்கில், அவருக்கு ஓராண்டு சிறைத்தண்டனை விதித்துச் சென்னை 11-வது சிறு வழக்குகள் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இத்தீர்ப்பை எதிர்த்துச் சென்னை 15-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் விமல் மேல்முறையீடு செய்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம், "ரூ. 10 லட்சத்தை 60 நாட்களுக்குள் விசாரணை நீதிமன்றத்தில் வைப்புத் தொகையாகச் செலுத்த வேண்டும்" என்ற நிபந்தனையுடன் சிறைத் தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், ரூ.10 லட்சம் டெபாசிட் செய்ய வேண்டும் என்ற இந்த நிபந்தனையை ரத்து செய்யக் கோரி நடிகர் விமல் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இம்மனுவை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், நடிகர் விமலுக்கு விதிக்கப்பட்ட ரூ.10 லட்சம் வைப்புத் தொகை செலுத்தும் நிபந்தனையை ரத்து செய்து உத்தரவிட்டார்.