இந்திய திரையிசையின் புகழ்பெற்ற பின்னணிப் பாடகி எஸ். ஜானகி மறைவுக்கு முதல்-அமைச்சர் விஜய் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து உருக்கமான புகழஞ்சலி செலுத்தியுள்ளார். அவரது மறைவு இந்திய இசை உலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சமூக வலைதளத்தில் வெளியிட்ட இரங்கல் பதிவில், “இசை உலகில் அழியாத முத்திரை பதித்தவர் எஸ். ஜானகி. அவரது இனிய குரலும், காலத்தால் அழியாத பாடல்களும் என்றும் மக்களின் மனதில் நிலைத்திருக்கும்” என்று முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார்.
மேலும், பல தலைமுறைகளை தனது குரலால் கவர்ந்த எஸ். ஜானகி, தமிழ் மட்டுமின்றி இந்தியாவின் பல மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடி இசை உலகில் தனக்கென தனி இடத்தை உருவாக்கியவர் என்றும் அவர் புகழாரம் சூட்டியுள்ளார்.
இசையின் மூலம் கோடிக்கணக்கான மக்களின் இதயங்களை தொட்ட எஸ். ஜானகியின் கலைப் பணி என்றும் மறக்க முடியாதது என்றும், அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலை முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார்.
எஸ். ஜானகியின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள், இசைக் கலைஞர்கள் மற்றும் ரசிகர்கள் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.



