சினிமா

விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா திருமணம்: இருவருக்கும் இடையே இத்தனை வயது வித்தியாசமா?

top-news

ஹைதராபாத்: தென்னிந்தியத் திரையுலகின் நட்சத்திர ஜோடிகளான விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் திருமணப் பேச்சுக்கள் சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவி வரும் வேளையில், தற்போது இவர்களது வயது குறித்த சுவாரஸ்யமான தகவல் ரசிகர்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.


திரையில் அற்புமான ஜோடிப் பொருத்தத்தை வெளிப்படுத்தும் இந்த இருவருக்கும் இடையே சரியாக 7 ஆண்டுகள் வயது வித்தியாசம் உள்ளது.

நமது 'ரவுடி ஸ்டார்' விஜய் தேவரகொண்டா 1989-ம் ஆண்டு மே மாதம் 9-ம் தேதி பிறந்துள்ளார். தற்போது அவருக்கு 36 வயது ஆகிறது. மறுபுறம், 'நேஷனல் கிரஷ்' ராஷ்மிகா மந்தனா 1996-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 5-ம் தேதி பிறந்துள்ளார். தற்போது அவருக்கு 29 வயது ஆகிறது.

திரைத்துறையில் சீனியர் நடிகராக இருக்கும் விஜய் தேவரகொண்டாவிற்கும், அவருக்குப் பின் சினிமாவில் நுழைந்த ராஷ்மிகாவிற்கும் இடையே உள்ள இந்த 7 ஆண்டு கால இடைவெளி, இவர்களது ரகசியக் காதலுக்கு ஒருபோதும் தடையாக இருந்ததில்லை.

'கீதா கோவிந்தம்' மற்றும் 'டியர் காம்ரேட்' போன்ற படங்களில் இவர்களது எதார்த்தமான நடிப்பைப் பார்த்த ரசிகர்கள், நிஜ வாழ்க்கையிலும் இவர்கள் இணைவதை "வயது வெறும் எண்களே" (Age is just a number) என்று கூறி கொண்டாடி வருகின்றனர்.

சமூக வலைதளங்களில் இந்த நட்சத்திர ஜோடிக்குத் திருமண வாழ்த்துக்கள் குவிந்து வரும் நிலையில், அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக ஒட்டுமொத்த திரையுலகமும் காத்திருந்த நிலையில் இன்று அவர்கள் இருவரின் திருமணமும் கோலகலமாக நடைபெறவுள்ளது.