வணிகம்

அதிரடியாக அதிகரித்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஷாக்..!

top-news

தங்கம் மக்களின் முதலீடுகளில் ஒன்றாக உள்ளது. இதனை சேமித்து வைத்து ஆபத்து காலத்தில் பயன்படுத்தும் வழக்கத்தை மக்கள் கொண்டுள்ளனர். கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை அதிகரித்து கொண்டே செல்கிறது. கடந்த சில மாதங்களில் தங்கம் விலை ரூ. 80,000-ஐ கடந்து விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த 2 நாட்களாக தங்கம் விலை குறைந்த நிலையில் இன்று தங்கம் விலை மீண்டும் அதிகரித்துள்ளது. இது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 

இன்று செப்டம்பர் 26ஆம் தேதி 22 காரட் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.40 உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வால், ஒரு கிராம் தங்கம் ரூ.10,550க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படிக்க: அனுஷ்காவின் ‘காதி’ திரைப்படம் ஓடிடி ரிலீஸ் தேதி எப்போது தெரியுமா..? வெளியான அறிவிப்பு!

நேற்றைய விலையுடன் ஒப்பிடுகையில் சவரனுக்கு (8 கிராம்) ரூ.320 உயர்ந்து, ஒரு சவரன் தங்கம் ரூ.84,400க்கு விற்பனையாகிறது. தங்கத்தின் விலை தொடர்ச்சியாக அதிகரித்து வருவதால் நகை வாங்குவோர் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

வெள்ளி விலை கிராமுக்கு ரூ.3 உயர்ந்து ஒரு கிராம் 153 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 1,53,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.