நடிகை அனுஷ்கா ஷெட்டி நடிப்பில் உருவான தெலுங்கு ஆக்ஷன் க்ரைம் திரைப்படமான ‘காதி’ (Ghaati), திரையரங்கு வெளியீட்டிற்குப் பிறகு ஓடிடியில் வெளியாகும் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் கிரிஷ் ஜகர்லமுடி இயக்கத்தில், அனுஷ்கா ஷெட்டி, விக்ரம் பிரபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்த ‘காதி’ திரைப்படம், கடந்த செப்டம்பர் 5-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. கலவையான விமர்சனங்களைப் பெற்ற இந்தத் திரைப்படம், எதிர்பார்த்த அளவில் பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெறவில்லை.
இதனையடுத்து, இப்படத்தின் ஓடிடி வெளியீடு குறித்த தகவல் வெளியாகி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியளித்துள்ளது. ‘காதி’ திரைப்படத்தின் டிஜிட்டல் உரிமத்தை அமேசான் பிரைம் வீடியோ (Amazon Prime Video) நிறுவனம் வாங்கியுள்ளது.
அதன்படி, இத்திரைப்படம் செப்டம்பர் 26, 2025 அன்று ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் இந்த ஆக்ஷன் க்ரைம் நாடகத் திரைப்படத்தை ரசிகர்கள் அமேசான் பிரைம் வீடியோவில் காணலாம். திரையரங்குகளில் இந்தப் படத்தைப் பார்க்கத் தவறிய ரசிகர்கள், தற்போது ஓடிடியில் காண ஆவலுடன் காத்திருக்கின்றனர்.


