தென்காசி

பட்டியலின மக்களின் 2 ஏக்கர் பட்டா இடத்தை ஆக்கிரமித்த நபர் மீது மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு

top-news

தென்காசி: பட்டியலின மக்களின் 2 ஏக்கர் பட்டா இடத்தை ஆக்கிரமித்த  நபர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி  தலீத் மக்கள் இயக்கம் தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது.

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் வட்டம், பனையூர் வயலிபட்டி கிராமத்தில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பாக அதே ஊரைச் சார்ந்த பட்டியலின மக்களுக்கு 2 ஏக்கர் நிலத்தில் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்ட இடத்தில் தனி நபரால் நிலம் முழுமையாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவகத்தில் உள்ள மாவட்ட ஆட்சியரின் நேரடி உதவியாளரிடம் தலீத் மக்கள் இயக்கம் சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது.

இது குறித்து, அளித்துள்ள மனுவில் வயலிபட்டி என்கிற கிராமத்தில் 1989ம் ஆண்டு பட்டிலின மக்களுக்கு ஆதிதிராவிட நலத்துறையின் சார்பாக இரண்டு ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுஅதில் 30 நபர்களுக்கு பட்டா வழங்கப்பட்டு விட்டது மீதம் 20 நபர்களுக்கு இன்றும் வழங்கப்படவில்லை. இந்தச் சூழ்நலையில் அந்தப் பகுதியைச் சேர்ந்த ஒரு தனினபரால் இரண்டு ஏக்க நிலம் முழுமையாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு தனி நபரால் கோவில் கட்டப்பட்டிருக்கிறது. இந்த விதிமீறல் குறித்து மதுரை உயர் நீதிமன்றம் கிளை கடந்த மார்ச் மாதம் 12ந் தேதி ஆலயத்தை அப்புறப்படுத்தி, விதிமீறல் குறித்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற உத்தரவை பிறப்பித்தும்,  இதுவரை வருவாய்துறை சார்பில் ஆலயத்தை அப்புறப்படுத்துவதற்கான எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை. ஆதலால் உயர் நீதிமன்ற உத்தரவை நடைமுறைபடுத்துமாறு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இம்மனு மாவட்ட ஆட்சித்தலைவரின் நேர்முக உதவியாளரை சந்தித்து கொடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தலீத் மக்கள் இயக்க மாநிலத்தலைவர் ச.கருப்பையா கூறுகையில், மனு குறித்து ஒரு வாரத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்படும் மாவட்ட ஆட்சித்தலைவரின் நேர்முக உதவியாளர் என கூறியுள்ளார். அவ்வாறு நடவடிக்கை எடுக்கபடவில்லை எனில்  வருகின்ற அக்.2ந் தேதி மகாத்மா காந்தி பிறந்தநாள் அன்று வயலிபட்டி கிராமத்தில் இருக்கக்கூடிய பட்டியலின மக்களுக்கு சொந்தமான இடத்தை மீடக வலியுறுத்தியும், உயர் நீதிமன்ற உத்தரவை நடைமுறைபடுத்தாத அரசு அதிகாரிகள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் பிரிவு 4ன் கீழ் வழக்கு பதிவு செய்ய வலியுறுத்தியும், முற்றுகை போராட்டத்தை தலீத் விடுதலை இயக்கமும், பல்வேறு ஜனநாயக சக்திகளும் இணைந்து நடத்த உள்ளோம் என அவர் கூறினார்.