தமிழ்நாடு

தமிழ்நாடு தினம்: இன்று பல மாநிலங்களில் கொண்டாட்டம்!

top-news

சென்னை: மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட நாளான நவம்பர் 1, தமிழ்நாட்டில் 'தமிழ்நாடு நாள்' என்று கொண்டாடப்பட வேண்டும் என்று ஒரு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.


1956-ம் ஆண்டு நவம்பர் 1-ம் தேதி, மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டதன் மூலம் மெட்ராஸ் மாகாணத்தில் இருந்து ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களுக்கான பகுதிகள் தனியே பிரிந்தன.

இதையொட்டி, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இன்று மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட்ட நாள் உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது.

எனினும், தமிழ்நாட்டில் மெட்ராஸ் மாகாணத்துக்கு 'தமிழ்நாடு' என்று பெயர் சூட்டப்பட்ட நாளான ஜூலை 18-ஐ மாநில அரசு 'தமிழ்நாடு நாளாக' அதிகாரப்பூர்வமாக அறிவித்து கொண்டாடி வருகிறது.