தமிழ்நாடு

நீலகிரிக்கு 'கனமழை' எச்சரிக்கை: தமிழகத்தில் இன்றைய வானிலை நிலவரம் என்ன?

top-news

சென்னை: தமிழகத்தில் இன்று (அக்டோபர் 9) நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மற்ற மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.


வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம்:

நேற்று மத்தியமேற்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று காலை அதே பகுதிகளில் நிலவுகிறது.

இது மேலும் கிழக்கு-தென்கிழக்கு திசையில் நகர்ந்து, மத்தியமேற்கு அரபிக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக அடுத்த 24 மணி நேரத்தில் வலுவிழக்கக் கூடும் என்று வானிலை மையம் கணித்துள்ளது.

இதற்கு இடையே, தென்னிந்தியப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

மேலும், குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சியும், தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு கேரளப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சியும் நிலவுகிறது.

இந்த வானிலை அமைப்புகளின் காரணமாகத் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஆனால், குறிப்பாக நீலகிரி மாவட்டத்தில் கனமழைக்கான எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.