சென்னை: தமிழ்நாட்டில் இன்று (அக்டோபர் 8, புதன்கிழமை) 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்து, அறிக்கை வெளியிட்டுள்ளது.
கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்:
பின்வரும் 10 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
நீலகிரி
கோவை
தேனி
திண்டுக்கல்
ஈரோடு
கிருஷ்ணகிரி
தருமபுரி
சேலம்
நாமக்கல்
திருப்பத்தூர்
சென்னை வானிலை:
தலைநகர் சென்னையைப் பொறுத்தவரை, இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.


