தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு சென்னை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று (அக்டோபர் 7, செவ்வாய்க்கிழமை) காலை வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர் மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
இதையும் படிக்க: தீபாவளி சிறப்புப் பேருந்துகள்: 20,378 பேருந்துகள் இயக்கம்.. அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு..!
குறிப்பாக, அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் திருச்சி ஆகிய 5 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் மேலும் தெரிவித்துள்ளது.
பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.


