தமிழ்நாடு

செந்தில் பாலாஜி அமைச்சராவதை நீதிமன்றம் தடுக்கவில்லை... திடீர் ட்விஸ்ட் கொடுத்த உச்சநீதிமன்றம்..!

top-news

பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் உள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராவது தொடர்பான விவகாரத்தில், உச்ச நீதிமன்றம் முக்கிய கருத்துக்களைத் தெரிவித்துள்ளது.


செந்தில் பாலாஜியின் ஜாமீனை ரத்து செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பான விசாரணையின்போது, நீதிபதிகள் பின்வரும் கருத்துக்களைத் தெரிவித்தனர்:

"செந்தில் பாலாஜி அமைச்சராவதை நீதிமன்றம் ஒருபோதும் தடுக்கவில்லை."

"ஆனால், அவர் மீண்டும் அமைச்சராகப் பொறுப்பேற்றால், அது வழக்கில் உள்ள சாட்சிகளைப் பாதிக்கும் என்ற புகார்கள் எழக்கூடும். அவர் அமைச்சராக இல்லாததை கருத்தில் கொண்டே ஜாமீன் வழங்கப்பட்டது."

"அவர் அமைச்சராகப் பொறுப்பேற்க விரும்பினால், அந்த கோரிக்கையை முன்வைத்து புதிய மனுவைத் தாக்கல் செய்யுங்கள். நீதிமன்ற அனுமதியுடன் அவர் அமைச்சராகலாம்."

"அமைச்சராகும்போது சாட்சியங்களை கலைக்க முயற்சிப்பதாக புகார் வந்தால், அவரது ஜாமீன் ரத்து செய்யப்படும்" என்றும் நீதிபதிகள் திட்டவட்டமாக எச்சரித்தனர்.

செந்தில் பாலாஜி, இந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் கடுமையான விமர்சனங்களுக்குப் பிறகு கடந்த ஏப்ரல் மாதம் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.