தமிழ்நாடு

ராமதாஸ் மருத்துவமனையில் அனுமதி... எம்.எல்.ஏ அருள் வெளியிட்ட முக்கிய் தகவல்!

top-news

பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அவர்களின் உடல்நிலை குறித்து சமூக வலைத்தளங்களில் பரவும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என அக்கட்சியின் தலைமைச் செய்தித் தொடர்பாளர் மற்றும் சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் அருள் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.

வதந்திக்கு முற்றுப்புள்ளி:

பாமக நிறுவனர் ராமதாஸ் சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் இருதய பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக இன்று (அக்டோபர் 5, 2025) காலை முதலே தகவல்கள் பரவி வந்தன. குறிப்பாக, அவருக்கு உடல்நிலை சரியில்லை என தவறான செய்திகள் வேகமாகப் பரவின.

எம்.எல்.ஏ. அருள் விளக்கம்:

இந்நிலையில், இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, அக்கட்சியின் தலைமைச் செய்தித் தொடர்பாளர் அருள் எம்.எல்.ஏ. விளக்கம் அளித்துள்ளார்.

"பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள் நலமுடன் இருக்கிறார். அவர் வழக்கமான முழு உடல் பரிசோதனைக்காகவே சென்னை அப்போலோ மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். பரிசோதனைகள் முடிந்தபின் அவர் நாளை (அக்டோபர் 7, 2025) மதியம் வீடு திரும்புவார். எனவே, அவரது உடல்நிலை குறித்து வரும் எந்த ஒரு வதந்தியையும் யாரும் நம்ப வேண்டாம்," என்று அருள் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.

பாமகவில் தந்தைக்கும் மகனுக்குமிடையே ஏற்பட்டுள்ள அதிகாரப் போராட்டச் சூழலில், ராமதாஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவல் வெளியானதால் கட்சித் தொண்டர்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டது. தற்போது அருள் எம்.எல்.ஏ.வின் விளக்கத்தால் தொண்டர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.