தமிழ்நாடு

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி!

top-news

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) பொதுச்செயலாளரும், மூத்த அரசியல் தலைவருமான வைகோ, திடீர் உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


கடந்த சில நாட்களாக சளி, காய்ச்சல் மற்றும் இருமல் தொந்தரவால் அவதிப்பட்டு வந்த நிலையில், அவருக்குக் காய்ச்சல் அதிகமானதால், நேற்று (அக்டோபர் 3, 2025) கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளார்.

மருத்துவர்கள் அவருக்கு உரிய சிகிச்சைகளை அளித்து வருகின்றனர். தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், ஓரிரு நாட்களில் அவர் வீடு திரும்புவார் என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

முன்னதாக, செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில் நடைபெற்று வரும் சுய மரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழாவில் வைகோ பங்கேற்கவிருந்த நிலையில், உடல்நலக் குறைவு காரணமாக அவரால் நிகழ்வில் கலந்துகொள்ள முடியவில்லை. அவரது மாநிலங்களவை எம்.பி. பதவிக்காலம் அண்மையில் முடிவடைந்த நிலையில், அவர் கட்சிப் பணிகளில் தீவிரம் காட்டி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வைகோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி கேட்டு மதிமுக தொண்டர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் அவரது உடல்நிலை குறித்து விசாரித்து வருகின்றனர்.