தென் மாவட்டங்களுக்கான பிரதான பேருந்து நிலையமான கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தின் (KCBT) அருகில் அமைக்கப்பட்டு வரும் கிளாம்பாக்கம் ரயில் நிலையம், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் பொதுமக்களின் பயன்பாட்டுக்குத் திறக்கப்படும் எனத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தெற்கு ரயில்வேயின் கூடுதல் பொது மேலாளர் மகேஷ் மற்றும் சென்னை மண்டல மேலாளர் சைலேந்திர சிங் ஆகியோர் இந்தக் தகவலை உறுதிப்படுத்தினர்.
நடைமேடை பணிகள் தீவிரம்:
கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தில் நடைமேடைகள் அமைக்கும் பணிகள் தற்போது துரிதமாக நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். குறிப்பாக, தற்போது மேற்கூரை அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.
இந்தப் பணிகள் நிறைவடைந்தவுடன், ரயில் நிலையம் ஜனவரி 2026 முதல் செயல்பாட்டுக்கு வரும்.
இதையும் படிக்க: மறு அறிவிப்பு வரும் வரை எந்த நிகழ்ச்சிகளையும் நடத்த வேண்டாம் - மாவட்ட நிர்வாகிகளுக்கு விஜய் உத்தரவு!
இந்த ரயில் நிலையம் செயல்பாட்டுக்கு வரும்போது, பேருந்து முனையத்திலிருந்து புறநகர் ரயிலில் சென்னையின் மற்ற பகுதிகளுக்குப் பயணிக்கக் காத்திருக்கும் ஆயிரக்கணக்கான பயணிகளுக்குப் பெரிதும் உதவியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


