கரூர் பொதுக்கூட்ட நெரிசல் சம்பவத்தால் தமிழகத்தில் பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், 'தமிழக வெற்றிக் கழகம்' (தவெக) நிர்வாகி ஆதவ் அர்ஜுனா மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
சமூக வலைதளங்களில் வன்முறையைத் தூண்டும் வகையிலும், 'புரட்சியை உண்டாக்க வேண்டும்' என்றும் அவர் கோரிக்கை விடுத்திருந்தார். இந்தச் சர்ச்சைக்குரிய கருத்து, தற்போதைய பதட்டமான சூழலைக் கருத்தில் கொண்டு, பொது அமைதிக்குப் பங்கம் விளைவிக்கக் கூடும் என்பதால், ஆதவ் அர்ஜுனா மீது 5 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்த வழக்குப் பதிவு, அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், தவெக தரப்பில் இருந்து வன்முறை சார்ந்த கருத்துகள் வருவதைத் தடுக்கும் நடவடிக்கையாகவும் பார்க்கப்படுகிறது.


