தமிழ்நாடு

சென்னை உட்பட 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!

top-news

தென்னிந்தியப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி (Upper Air Cyclonic Circulation) காரணமாக, தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் இன்று (செப்டம்பர் 30) மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


மேலும், இந்தச் சுழற்சியின் தாக்கம் காரணமாக, அடுத்த 3 மணி நேரத்தில் (காலை 10 மணி வரை) சென்னை மற்றும் அதனை ஒட்டியுள்ள திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கூடுதல் தகவலை வெளியிட்டுள்ளது. இதனால், இந்த 4 மாவட்டங்களில் இன்று காலை நேர வானிலை மேகமூட்டத்துடனும், லேசான தூரலுடனும் காணப்படலாம்.