தமிழ்நாடு

ஆயுத பூஜை, விஜயதசமி சிறப்புப் பேருந்துகள்: இன்று கிளாம்பாக்கத்தில் இருந்து 885 பேருந்துகள் இயக்கம்!

top-news


தமிழ்நாட்டில் நாளை (அக்டோபர் 1) ஆயுத பூஜையும், நாளை மறுதினம் (அக்டோபர் 2) விஜயதசமியும் கொண்டாடப்பட உள்ளன. அத்துடன், வார விடுமுறையும் இணைந்து வருவதால், பொதுமக்கள் பலர் சொந்த ஊர்களுக்கும், சுற்றுலாத் தலங்களுக்கும் செல்லத் திட்டமிட்டுள்ளனர்.

இதைக் கருத்தில் கொண்டு, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் இன்று (செப்டம்பர் 30) சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


அதன்படி, சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, சேலம், திருப்பூர், ஈரோடு ஆகிய முக்கிய ஊர்களுக்கு இன்று ஒரே நாளில் 885 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. இந்த சிறப்பு ஏற்பாடு மூலம், பயணிகள் சிரமமின்றிப் பயணிக்க முடியும்.