தமிழ்நாடு

கரூர் துயர சம்பவம்: "லைட் ஹவுஸ் ரவுண்டானாவை மறுத்தோம்" - ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் விளக்கம்

top-news

கரூர் மாவட்டத்தில் நேற்று (செப்டம்பர் 28, 2025) 'தமிழக வெற்றிக் கழகம்' (தவெக) தலைவர் நடிகர் விஜய் பங்கேற்ற பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட அசம்பாவிதத்தில் இதுவரை 40 பேர் பலியாகியுள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து இன்று (செப்டம்பர் 29, 2025) கரூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது, கூட்ட நெரிசலுக்கு அனுமதி வழங்கப்பட்டது குறித்த கேள்விகளுக்கு ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் விளக்கமளித்தார்.

அவர் கூறியதாவது:

"கடந்த 23.09.25 அன்று தவெக சார்பில் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நடத்துவதற்காக ஒரு மனு கொடுக்கப்பட்டது. அந்த மனுவில், கரூரில் உள்ள 'லைட் ஹவுஸ் ரவுண்டானா' பகுதியில் கூட்டம் நடத்த அனுமதி கோரப்பட்டிருந்தது.


ஆனால், அந்தப் பகுதி மிகவும் ஆபத்தானது (Danger Zone) என்பதால், அங்கு அனுமதி மறுப்பதற்கான நடவடிக்கைகளை காவல்துறை உடனடியாக ஆரம்பித்தது. இருப்பினும், மீண்டும் தவெக தரப்பில் இருந்து, 'லைட் ஹவுஸ் ரவுண்டானா அல்லது உழவர் சந்தை' ஆகிய இரண்டு இடங்களில் ஏதேனும் ஒரு இடத்தில் கூட்டம் நடத்த அனுமதி கொடுங்கள் என்று கேட்டனர்."

இவ்வாறு ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் தெரிவித்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.