நடிகர் விஜயின் 'தமிழக வெற்றிக் கழகம்' சார்பில் கரூரில் நடைபெற்ற பரப்புரைக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது.
பரப்புரை நடைபெற்ற இடத்தில் அளவுக்கு அதிகமான கூட்டம் கூடியதால், கட்டுப்பாட்டை மீறி நெரிசல் ஏற்பட்டது. இதில் சிக்கி படுகாயமடைந்தவர்கள் மற்றும் மயக்கமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
சிகிச்சை பெற்று வருபவர்களில் மேலும் சிலர் கவலைக்கிடமான நிலையில் உள்ளதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என மருத்துவமனை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. பொதுக்கூட்டங்கள் மற்றும் பேரணிகள் நடத்த விதித்த நிபந்தனைகளை முறையாகப் பின்பற்றாததால் இந்தக் கோரச் சம்பவம் நிகழ்ந்ததாகக் கூறி, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


