சென்னை: மாணவர் சிறப்பு பேருந்து திட்டத்தை கண்காணிக்க அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
மாணவர் சிறப்பு பேருந்து திட்டம் என்பது, அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்கள் பொதுப் பேருந்துகளில் சந்திக்கும் நெரிசலைக் கருத்தில் கொண்டு, சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் பள்ளி மாணவர்களுக்காக மட்டுமான இயக்கும் பேருந்துகள் சேவையை தமிழக அரசுத் தொடங்கி உள்ளது. இத்திட்டத்தில் 25 அரசு உதவிபெறும் பள்ளிகளுக்குச் செல்லும் மாணவர்களின் போக்குவரத்திற்காக, காலை மற்றும் மாலை நேரங்களில் 25 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இந்த சேவையை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் ஆகியோர் தொடங்கி வைத்தனர். காலை மற்றும் மாலை நேரங்களில் மாணவர்கள் பாதுகாப்பாக பயணம் செய்ய இந்த பேருந்துகள் இயக்கப்படுகின்றன.பெண்களுக்கான சிறப்பு பேருந்துகளைத் தொடர்ந்து, மாணவர்களின் நலனுக்காகவும், அவர்கள் பொதுப் பேருந்துகளில் நெரிசலில் சிக்காமல் பயணிக்கவும் இந்த திட்டம் தொடங்கப்பட்டது.
இது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளது யாதனில், மாணவர்களுக்கு இலவச 'பஸ் பாஸ்' திட்டம் நாட்டுக்கே வழிகாட்டியது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மாணவர் மட்டும் சிறப்பு பஸ் திட்டத்தின் வெற்றி குறித்து வெளியான செய்தியை சுட்டிக்காட்டி முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: சட்டசபை உறுப்பினராக, 1989ல் எனது முதல் உரையே மாணவர்களுக்கு இலவச 'பஸ் பாஸ்' வழங்க வேண்டும் என்பதுதான். அதனை ஏற்றுக்கொண்டு, கருணாநிதி செயல்படுத்திய அத்திட்டம் நாட்டுக்கே வழிகாட்டியது. அதன் தொடர்ச்சியாக, தற்போது மாணவர் மட்டும் சிறப்புப் பஸ்களை நமது திராவிட மாடல் ஆட்சியில் இயக்கி வருகிறோம். அமைச்சர் சிவசங்கரும், போக்குவரத்துத் துறை அதிகாரிகளும் இத்திட்டத்தின் செயல்பாட்டைத் தொடர்ந்து விழிப்போடு கண்காணித்து, மேலும் மேலும் சிறப்பாகச் செயல்படுத்திட வேண்டும் என வாழ்த்துகிறேன் என முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்.


