தமிழ்நாடு

இன்று ஓணம் பண்டிகை: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

top-news

சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மலையாள சமூகத்தினருக்கு மனமார்ந்த ஓணம் வாழ்த்துகளை தெரிவித்தார்.

முதல்வர் ஸ்டாலின் தனது ‘எக்ஸ்’ (X) தளத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து பதிவில் கூறியிருப்பதாவது: “என் அன்பான மலையாள சகோதரர்களுக்கும் சகோதரிகளுக்கும் இனிய ஓணம் நல்வாழ்த்துக்கள். இந்த ஓணம் நமது பிணைப்புகளை மேலும் வலுப்படுத்தட்டும். ஒவ்வொரு குடும்பத்திலும் மகிழ்ச்சி பொங்கட்டும். சமத்துவம், நீதி, கண்ணியம் நிறைந்த சமூகத்தை நாம் ஒன்றிணைந்து கட்டியெழுப்பிட, இந்த பண்டிகை நம்மை ஊக்குவிக்கட்டும்” என தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் பெருமளவில் வசித்து வரும் மலையாள சமூகத்தினர், ஓணம் பண்டிகையை சிறப்பாகக் கொண்டாடி வருவது குறிப்பிடத்தக்கது. மலையாளிகளின் பாரம்பரியமான கலாச்சாரம், உணவுவகைகள், வல்லம் கலி (படகு பந்தயம்) உள்ளிட்ட நிகழ்வுகள் மூலம் உலகளவில் பிரசித்திபெற்ற பண்டிகையாக ஓணம் திகழ்கிறது.

இந்த நிலையில், சமூக நல்லிணக்கத்தையும், ஒற்றுமையையும் வலியுறுத்தும் வகையில் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ள வாழ்த்து, தமிழகத்தில் வாழும் மலையாள சமூகத்தினருக்கு பெரும் உற்சாகத்தை அளித்துள்ளது.