தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் முருகன் கோயிலில், விரைவு தரிசனத்திற்கு அழைத்து செல்வதாக கூறி இந்து அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷிடம் அர்ச்சகர்கள் ரூ.4000 பெற்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோயிலுக்கு வந்திருந்த அமைச்சரிடம் சிறப்பு தரிசனம் ஏற்பாடு செய்து தருவதாக கூறி இந்த தொகை பெறப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்ததையடுத்து கோயில் நிர்வாக நடைமுறைகள் குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.
பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் மத்தியில் இந்த சம்பவம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள நிலையில், “அமைச்சரிடமே இவ்வாறு பணம் பெறப்பட்டால், சாதாரண பக்தர்களிடம் என்ன நிலை இருக்கும்?” என்ற கேள்வியும் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
மேலும், கோயில்களில் நடைபெறும் சிறப்பு தரிசனம், கட்டண வசூல் மற்றும் அர்ச்சகர்களின் செயல்பாடுகள் குறித்து அறநிலையத்துறை தீவிர விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.
தமிழகத்தின் முக்கிய ஆன்மிக தலங்களில் ஒன்றான திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஏற்பட்ட இந்த விவகாரம் தற்போது அரசியல் மற்றும் ஆன்மிக வட்டாரங்களில் பரபரப்பை கிளப்பியுள்ளது.


