தமிழ்நாடு

யுகாதி திருநாள்: தெலுங்கு மற்றும் கன்னடம் பேசும் மக்களுக்கு அண்ணாமலை வாழ்த்து

top-news

சென்னை: தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்களின் புத்தாண்டு தினமான யுகாதி திருநாள் நாளை (மார்ச் 19) உற்சாகமாகக் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலை தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் தனது 'எக்ஸ்' (X) சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
"உலகெங்குமுள்ள தெலுங்கு மற்றும் கன்னட சகோதர சகோதரிகளுக்கு, இனிய உகாதி புத்தாண்டு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அனைவரின் வாழ்விலும் புதிய தொடக்கங்கள், நல்ல ஆரோக்கியம், செழிப்பு மற்றும் மகிழ்ச்சி நிரம்பவும், இறைவன் அருளினால் அனைத்து வளங்களும் நிறைந்திருக்கவும் வேண்டிக் கொள்கிறேன்." 

தமிழக அரசியல் களத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், பல்வேறு தலைவர்களும் யுகாதி வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை ஆகியோரும் மக்களுக்குத் தங்களது யுகாதி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.