தமிழ்நாடு

தருமபுரியில் முதலமைச்சர் ஸ்டாலின் அரசு விழாவில் பங்கேற்பு !

top-news

தருமபுரி: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (17.08.2025) காலை 10.00 மணிக்கு தருமபுரி மாவட்டம், தருமபுரி நகரில் தடங்கம் பி.எம்.பி. கல்லூரி அருகே நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொண்டார்.

இந்த விழாவில், தருமபுரி மாவட்டத்திற்கு ரூ.1,705 கோடி மதிப்பிலான புதிய திட்டப் பணிகளுக்கு முதலமைச்சர் அடிக்கல் நாடினார்.மேலும், ஏற்கனவே நிறைவடைந்த பல்வேறு அரசு திட்டப் பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.


அத்துடன், பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட உள்ளன. விழா நிகழ்வில் பொதுமக்களிடம் உரையாற்றிய முதலமைச்சர், தருமபுரி மாவட்ட வளர்ச்சிக்கான அரசு முயற்சிகளை விளக்கி, புதிய திட்டங்களைப் பற்றிய தகவல்களையும் பகிர்ந்து கொண்டார்.


இந்த விழாவிற்கு மாவட்ட மக்கள், பொதுமக்கள், மாணவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பெருமளவில் திரண்டு வந்திருந்தார்கள்.