திருச்சி: திருச்சி மாவட்டம் சமயபுரம் பகுதியில் அமைந்துள்ள HOPE மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான பள்ளியில் இன்று (டிசம்பர் 23, 2025) கிறிஸ்துமஸ் விழா உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.
இந்த விழாவையொட்டி, உலக மனித உரிமைகள் ஆணையம் மற்றும் நியூ பேஸ் பவுண்டேஷன் ஆகிய அமைப்புகளின் சார்பில் குழந்தைகளுக்கு உணவு மற்றும் கிறிஸ்துமஸ் கேக்குகள் வழங்கப்பட்டன.
இந்தக் கிறிஸ்துமஸ் விழாவில் கவிஞரும் சமூகச் செயல்பாட்டாளருமான ஜோசன் ரஞ்சித் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்பித்தார். இந்த நிகழ்வு மாற்றுத்திறனாளிக் குழந்தைகளிடையே மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியது.


