அரசியல்

"தவறு செய்தவன் திருந்த பார்க்கணும்...ச்ச..” நடிகர் சத்யராஜ் ஆதங்கம்!

top-news

கரூரில் 'தமிழக வெற்றிக் கழகம்' (தவெக) தலைவர் விஜய் பங்கேற்ற தேர்தல் பரப்புரைக் கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்திருக்கும் சம்பவம் குறித்து நடிகர் சத்யராஜ் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இந்தத் துயரச் சம்பவம் தமிழகம் முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக நடிகர் சத்யராஜ் வெளியிட்ட இரங்கல் செய்தியில், தனது ஆழ்ந்த வருத்தத்தைப் பதிவு செய்ததுடன், கவனக்குறைவாக நடந்த நிகழ்வுகள் குறித்து மறைமுகமாகக் கருத்துத் தெரிவித்துள்ளார்.

நடிகர் சத்யராஜின் கருத்து:

"விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் கரூரில் நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்ட நெரிசலில் 39 பேர் உயிரிழந்திருப்பது மிகுந்த சோகத்தை அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


இந்தச் சம்பவம் குறித்து அவர் பேசும்போது, 'தப்பு என்பது தெரிந்து செய்வது. தவறு செய்தவன் திருந்த பார்க்கணும், தப்பு செய்தவன் வருந்தியாகணும்' என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த துயரமான நேரத்தில், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் அளிக்க வேண்டியது அவசியம் என்றும், எதிர்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் நடக்காமல் இருக்க உரிய பாதுகாப்பும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தேவை என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.