அரசியல்

விவசாய நிலம் வாங்கியிருப்பது உண்மைதான் - அண்ணாமலை அறிக்கை!

top-news

சென்னை: விவசாய நிலத்தை நான் வாங்கியிருப்பது உண்மைதான். இனியாவது பயனுள்ளதாக நேரத்தைச் செலவிடுவீர்கள் என்பதற்காகவே அண்ணாமலை இந்த விளக்கத்தை வெளியிடுகிறேன் என கூறியுள்ளார். அண்ணாமலை திமுகவுடன் மறைமுக உறவு வைத்துள்ளதாகவும், இதன் அடிப்படையில் தொண்டாமுத்தூர் பகுதியில் ரூ.80 கோடி மதிப்புள்ள சொத்தை சட்டவிரோதமாக அவர் பதிவு செய்ததாக சமுக வலைதளங்களில் செய்திகள் பரவி வந்தன. மேலும் திமுக ஆதரவுடன் அண்ணாமலை வாங்கியதாக கூறி சொத்துக்களின் விவரப்பட்டியல்களையும் சமூக வலைதளப்பதிவுகளில் வெளியிட்டு வருகின்றனர்.

இது குறித்து அண்ணாமலை அறிக்கையில், எனது அரசியல் வேலைகளுக்கு அப்பாற்பட்டு சமுதாய நலனுக்காகவும், இயற்கை விவசாய நலனிற்காகவும், நான் செய்து வரும் பணிகள் குறித்து சிலர் வதந்தி பரப்பிவருவதாக எனது கவனத்திற்கு வந்தது. இயற்கை விவசாயத்தின் மீது நான் கொண்டுள்ள ஆர்வத்தையும், எங்கள் 'We the Leaders'அறக்கட்டளை, இயற்கை விவசாயம் தொடர்பாக பல முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருவதையும், உங்களில் பலர் அறிந்திருப்பீர்கள். எனவே, இது தொடர்பான பின்வரும் குறிப்புகளை உங்கள் முன்வைப்பது எனது கடமை என்று நான் கருதுகிறேன்.

கடந்த ஜூலை 12ம் தேதி விவசாய நிலத்தை நான் வாங்கியிருப்பது உண்மைதான். இந்த நிலத்தை, நான், என்னுடைய மற்றும் என் மனைவியுடைய சேமிப்பு மற்றும் கடன் ஆகியவற்றைப் பயன்படுத்தி வாங்கியுள்ளேன். கடந்த இரண்டு மாதங்களாக, எனது வங்கிக் கணக்கு மூலம், அந்தக் கடனுக்கான மாதாந்திர வட்டியையும் செலுத்தி வருகிறேன். நிலத்தைப் பதிவு செய்யும் நாளில் நான் செல்லவில்லை என்று கூறுபவர்கள், ஒரு அசையாச் சொத்தை, பவர் ஆப் அட்டர்னி மூலம் வாங்க முடியும் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். ஜூலை 10ம் தேதி காளப்பட்டி பதிவு அலுவலகத்தில் எனது மனைவி அகிலாவுக்கு, எனது பவர் ஆப் அட்டர்னி வழங்கப்பட்டது.

இதற்கு தனது அறிக்கையின் மூலம் விளக்கம் அளித்துள்ள அண்ணாமலை, ‘‘எனது அரசியல் வேலைகளுக்கு அப்பாற்பட்டு சமுதாய நலனுக்காகவும், இயற்கை விவசாய நலனிற்காகவும், நான் செய்து வரும் பணிகள் குறித்து சிலர் வதந்தி பரப்பி வருவதாக எனது கவனத்திற்கு வந்தது. என் மீது குறை சொல்வதற்காகவே, வெட்டியாக நேரத்தை வீணடித்துக் கொண்டிருப்பதை விட்டு, இனியாவது பயனுள்ளதாக நேரத்தைச் செலவிடுவீர்கள் என்பதற்காகவே இந்த விளக்கத்தை வெளியிடுகிறேன் என்று குறிப்பிட்டிருந்தார்.