மதுரை : 2026க்குப் பிறகு ஐசியூவிற்கு யார் செல்கிறார்கள் என தெரியும் என மதுரை விமான நிலையத்தில் நயினார் நாகேந்திரன் பேட்டி அளித்துள்ளார்.
தியாகி இமானுவேல் சேகரனார் நினைவுநாளை முன்னிட்டு பரமக்குடி செல்வதற்காக மதுரைக்கு விமானம் மூலம் வந்த பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர், "அதிமுக வலுவாகத்தான் உள்ளது. அண்ணன் எடப்பாடி பழனிசாமி செல்கின்ற இடமெல்லாம் ஆரவாரமாக மக்கள் ஆதரவு கொடுக்கிறார்கள். எதிர்க்கட்சியான அ.தி.மு.க. நெருக்கடியில் உள்ளது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. அவர்கள் பொறாமையிலேயே சொல்கிறார்கள்.மேலும், அதிமுகவை பாஜக உடைக்க வேண்டிய அவசியம் கிடையாது.
மத்திய மந்திரி அமித்ஷாவை செங்கோட்டையன் சந்தித்ததாக கூறப்படும் நிகழ்வு குறித்து என்னிடம் முழு தகவல்கள் இல்லை. முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணிக்குக் கொண்டுவர தயாராக இருக்கிறேன்.”
பாஜக ஐசியூவில் உள்ளதாக உதயநிதி சொல்லி இருக்கிறார். 2026க்குப் பிறகு யார் ஐசியூவிற்கு செல்கிறார்கள் எனத் தெரியும் என்று அவர் கூறியுள்ளார்.


