அரசியல்

பிரிந்து சென்றவர்களை பத்து நாட்களுக்குள் ஒருங்கிணைக்காவிட்டால்.. ஈபிஎஸ்சுக்கு செங்கோட்டையன் கெடு !

top-news

கோபிசெட்டிபாளையம்: அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை பத்து நாட்களுக்குள் ஒருங்கிணைக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமிக்கு செங்கோட்டையன் கெடு விதித்துள்ளார்.

இன்று கோபிசெட்டிபாளையத்தில் நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் முன்னாள் அதிமுக அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது.. 'அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற தலைவர்களை அதிமுகவின் பொதுச்செயலாளர் அழைத்து உடனடியாக அழைத்து பேசி கட்சியை ஒருங்கிணைக்க வேண்டும். பத்து நாட்களுக்குள் இந்த ஒருங்கிணைப்பு நடக்காவிட்டால் பிரிந்து சென்றவர்கள் அனைவரும் கூடி ஒருங்கிணைப்பு பணியை மேற்கொள்வோம்  என்று தெரிவித்தார். 

மேலும், அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களில் யாரையெல்லாம் இணைக்கலாம் என்று பொதுச்செயலாளரே முடிவு எடுக்கலாம் என்றும் தெரிவித்தார். 

பிரிந்து சென்றவர்கள் எந்தவித நிபந்தனையும் இல்லாமல் கட்சியில் சேர தயாராக இருக்கிறார்கள். எடப்பாடி பழனிசாமியே கட்சி பொறுப்பிலிருந்து ஒருமுறை நீக்கப்பட்டவர் என்றும் அவர் தெரிவித்தார்.

செங்கோட்டையன் அவர்களது இந்த பேச்சு அரசியல் வட்டாரத்தையே திரும்பி பார்க்க வைத்திருக்கிறது. மேலும் வரும் பத்து நாட்களில் என்ன நடக்க போகிறது என்பதை தமிழகமே உற்று பார்த்து கொண்டிருக்கிறது.