அரசியல்

திமுகவினரின் பேச்சை சகிக்க முடியவில்லை - மார்க்சிஸ்ட் கட்சி கண்டனம்..!

top-news

சென்னை: கூட்டணி மற்றும் பொது தளங்களில் தி.மு.க.வினரின் சில பேச்சுக்கள் வரம்பு மீறிச் செல்வதாகவும், அதனைச் சகிக்க முடியவில்லை என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி காட்டமான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.

இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில், தோழமை உணர்வுடன் செயல்பட்டு வரும் சூழலில், தி.மு.க.வின் சிலர் மேடைகளிலும் சமூக வலைதளங்களிலும் பேசி வரும் கருத்துக்கள் அரசியல் நாகரிகத்திற்கு எதிரானதாக உள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், கூட்டணி தர்மத்தை மீறும் வகையிலும், தோழமைக் கட்சிகளை மலிவாகச் சித்தரிக்கும் வகையிலும் பேசப்படும் பேச்சுகளைத் தி.மு.க. தலைமை உடனடியாகத் தலையிட்டுத் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும், தவறான முறையில் கருத்து தெரிவிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் இந்த அறிக்கை, தமிழக அரசியல் களத்திலும், தி.மு.க. கூட்டணி வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.