அரசியல்

த.வெ.க. உறுப்பினர் சேர்க்கை 2 கோடியைத் தாண்டியது: தென்னிந்தியாவில் அதிக உறுப்பினர்களைக் கொண்ட கட்சியாக உருவெடுத்த த.வெ.க.!

top-news

சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க) உறுப்பினர் சேர்க்கை எண்ணிக்கை தற்போது 2 கோடியைக் கடந்து மாபெரும் சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் தென்னிந்தியாவில் தொடங்கப்பட்ட கட்சிகளில், அதிக உறுப்பினர்களைக் கொண்ட முதல் கட்சியாக த.வெ.க. உருவெடுத்துள்ளது.

சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் முதல் முறையாகக் களம் கண்ட த.வெ.க., 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. சுமார் 34.92 சதவீத வாக்குகளை அள்ளி, தி.மு.க., அ.தி.மு.க. போன்ற பாரம்பரியக் கட்சிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து, கடந்த மே 10-ஆம் தேதி தமிழகத்தின் முதலமைச்சராக கட்சியின் தலைவர் விஜய் பதவியேற்றார்.

இந்த வெற்றியைத் தொடர்ந்து, கட்சியை அடிமட்ட அளவில் மேலும் வலுப்படுத்தும் பணிகளில் த.வெ.க. தீவிரமாக ஈடுபட்டு வந்தது. இதன் விளைவாக, கட்சியின் அதிகாரப்பூர்வ உறுப்பினர் சேர்க்கை தற்போது 2 கோடியைத் தாண்டி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.

இந்தச் சாதனையைத் தொடர்ந்து, த.வெ.க. தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் சமூக வலைத்தளங்களில் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி, கொண்டாடி வருகின்றனர்.