அரசியல்

புதிய த.வெ.க. அரசின் முதல் சட்டமன்றக் கூட்டம் நாளை கூடுகிறது: ஆளுநர் உரையாற்றுகிறார்! சென்னை:

top-news

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை பெற்று, முதலமைச்சர் விஜய் தலைமையில் த.வெ.க. புதிய அரசை அமைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து, 17-வது சட்டமன்றத்தின் முதல் அதிகாரப்பூர்வ கூட்டத்தொடர் நாளை (வியாழக்கிழமை) காலை 10 மணிக்குத் தொடங்குகிறது.

ஆளுநர் உரையுடன் தொடக்கம்: புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு நடக்கும் முதல் கூட்டத்தொடர் என்பதால், மரபுப்படி தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் நாளை உரையாற்றுகிறார். நாளை காலை தலைமைச் செயலகம் வரும் ஆளுநரை, சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் பூங்கொத்து கொடுத்து முறைப்படி வரவேற்பார்.

ஆளுநர் தனது உரையில், த.வெ.க. அரசின் புதிய கொள்கைகள், மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் எதிர்காலச் செயல்பாடுகள் குறித்த முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆளுநரின் இந்த உரை சுமார் ஒரு மணி நேரம் நிகழக்கூடும்.

புதிய எம்.எல்.ஏ.க்களுக்கு புத்தாக்க பயிற்சி: இம்முறை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 234 சட்டமன்ற உறுப்பினர்களில், 146 பேர் முதன்முறையாகச் சபைக்குள் நுழையும் புதியவர்கள் ஆவர். இவர்கள் அவையின் மரபுகள், விதிகள் மற்றும் நடைமுறைகளைக் கற்றுக் கொள்வதற்காகச் சென்னை கலைவாணர் அரங்கில் இரண்டு நாட்கள் புத்தாக்க பயிற்சி அளிக்கப்பட்டது. இந்தப் பயிற்சியை முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது

நாளை ஆளுநர் உரை முடிந்தவுடன், அடுத்தடுத்த நாட்களில் அதன் மீதான விவாதங்கள் நடைபெறும். எதிர்க்கட்சி வரிசையில் உள்ள தி.மு.க. (59 இடங்கள்) மற்றும் அ.தி.மு.க. உறுப்பினர்கள் எழுப்பப்போகும் கேள்விகளால் இந்த கூட்டத்தொடர் மிகவும் பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.