அரசியல்

நிதி ஒதுக்கீடு முதல் தமிழக திட்டங்கள் வரை… பிரதமருடன் முதல்வர் விஜய் ஆலோசனை

top-news

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி அவர்களை சந்தித்த தமிழக முதல்வர் விஜய், மாநிலத்திற்கு தேவையான நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து விரிவாக பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


இந்த சந்திப்பில் தமிழகத்திற்கு நிலுவையில் உள்ள மத்திய நிதி, புதிய உள்கட்டமைப்பு திட்டங்கள், ரயில் மற்றும் மெட்ரோ விரிவாக்கம், வெள்ள நிவாரண நிதி, தொழில் முதலீடுகள் உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகள் குறித்து முதல்வர் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.
மேலும், மாநில உரிமைகள், நீர்வள பிரச்சனைகள் மற்றும் கல்வி தொடர்பான விஷயங்களும் ஆலோசிக்கப்பட்டதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக தமிழக வளர்ச்சித் திட்டங்களுக்கு மத்திய அரசு கூடுதல் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முதல்வராக பொறுப்பேற்ற பிறகு பிரதமருடன் விஜய் மேற்கொண்ட இந்த முக்கிய சந்திப்பு அரசியல் ரீதியாகவும் நிர்வாக ரீதியாகவும் அதிக கவனம் பெற்றுள்ளது.
இந்த சந்திப்பு தமிழகத்திற்கு புதிய திட்டங்கள் மற்றும் கூடுதல் நிதி ஒதுக்கீடுகளை பெற்றுத்தருமா என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரங்களிலும் பொதுமக்கள் மத்திலும் அதிகரித்துள்ளது.