அரசியல்

அமைச்சர்களுக்கு விஜய் போட்ட அதிரடி கட்டுப்பாடு.. ‘தகுதி மட்டும் தான் முக்கியம்’ என கோட்டையில் புதிய உத்தரவு!

top-news

தமிழக அரசியல் வட்டாரங்களில் தற்போது முதல்வர் விஜய் பிறப்பித்ததாக கூறப்படும் ஒரு முக்கிய உத்தரவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமைச்சர்களின் அலுவலகங்களில் ஜாதி, மதம், சொந்த பந்தம் போன்ற எந்த விதமான சார்புகளுக்கும் இடமிருக்கக் கூடாது என்பதே அந்த உத்தரவின் மையக் கருத்தாக கூறப்படுகிறது.


கோட்டை வட்டாரங்களில் கசிந்த தகவலின்படி, அமைச்சர்களின் தனிப்பட்ட உதவியாளர்கள் மற்றும் அலுவலக பணியாளர்களை தேர்வு செய்யும்போது “தகுதி மட்டுமே முக்கியம்” என முதல்வர் கடுமையான அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
“அமைச்சர்களின் ஆபீஸ்களில் ஜாதியின் நிழல்கூட படியக் கூடாது. திறமை, ஒழுக்கம், நிர்வாகத் திறன் மட்டுமே கணக்கில் கொள்ளப்பட வேண்டும்” என்று கூறப்பட்டதாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.

இந்த உத்தரவு, தற்போதைய ஆட்சியில் ‘நோ காம்ப்ரமைஸ்’ நிர்வாக பாணியை கொண்டு வர முயற்சியாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக அரசியல் பரிந்துரைகள் மற்றும் உறவினர் ஆதிக்கம் அதிகரிக்கக் கூடாது என்பதில் முதல்வர் விஜய் தீவிரமாக இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும், அமைச்சர்களின் அலுவலகங்களில் பணியாற்றுபவர்கள் குறித்து தனிப்பட்ட கண்காணிப்பும் நடைபெறலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளதால், அதிகாரிகள் மத்தியில் கூடுதல் கவனம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

இந்த தகவல்கள் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படாத போதிலும், “விஜய் அரசு நிர்வாகத்தில் பெரிய மாற்றங்களை கொண்டு வருகிறதா?” என்ற கேள்வி தற்போது அரசியல் வட்டாரங்களில் ஹாட் டாபிக்காக மாறியுள்ளது.