அரசியல்

கோவை சிறுமி கொலை சம்பவம்… 48 மணி நேரமாகியும் நேரில் செல்லாத முதல்வர் விஜய்க்கு எதிராக எழும் கேள்விகள்

top-news

கோவை சூலூரில் 10 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ள நிலையில், சம்பவம் நடந்த 48 மணி நேரத்தைக் கடந்தும் முதல்வர் Vijay பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்திக்காதது அரசியல் வட்டாரங்களில் கடும் விவாதமாக மாறியுள்ளது.

சம்பவத்துக்குப் பிறகு முதல்வர் தனது அதிகாரப்பூர்வ ‘எக்ஸ்’ சமூக வலைதளப் பக்கத்தில் கண்டனப் பதிவு ஒன்றை வெளியிட்டு, “மனிதநேயமற்ற, மன்னிக்க முடியாத குற்றம்” என்று குறிப்பிட்டிருந்தார். ஆனால் அதற்குப் பிறகு கோவைக்கு நேரில் சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறாதது குறித்து எதிர்க்கட்சிகள் மற்றும் பொதுமக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

“சமூக வலைதள பதிவு மட்டும் போதுமா? பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் துயரை நேரில் பகிர வேண்டாமா?” என்ற கேள்விகள் இணையத்திலும் அரசியல் மேடைகளிலும் பரவி வருகின்றன.

மேலும், சட்டம் ஒழுங்கு மற்றும் பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு குறித்து அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், முதல்வர் நேரில் சென்று மக்களுக்கு நம்பிக்கை அளிக்க வேண்டும் என்றும் பல தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த விவகாரம் தற்போது தமிழக அரசியலில் முக்கிய பேசுபொருளாக மாறியுள்ள நிலையில், ஆளும் தரப்பின் அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.