அரசியல்

டாஸ்மாக்கில் அதிரடி மாற்றங்கள் வரும்… புதிய அமைச்சர் விக்னேஷ் எச்சரிக்கை

top-news

மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சராக விக்னேஷ் பொறுப்பேற்றுள்ள நிலையில், டாஸ்மாக் செயல்பாடுகளில் விரைவில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் கொண்டு வரப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.


செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விக்னேஷ், “டாஸ்மாக் கடைகளில் பல்வேறு பிரச்சனைகள் இருப்பது அரசின் கவனத்திற்கு வந்துள்ளது. அதனை கட்டுப்படுத்தும் வகையில் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்று கூறினார்.
மேலும், “அரசு நிர்ணயித்த நேரத்தை மீறி இரவு 10 மணிக்குப் பிறகும் மது விற்பனை நடைபெறுவது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் மீது உடனடி சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் எச்சரித்தார்.

டாஸ்மாக் கடைகளில் ஒழுங்கின்மை, அதிக விலை வசூல், சட்டவிரோத விற்பனை உள்ளிட்ட புகார்களை கட்டுப்படுத்த புதிய கண்காணிப்பு முறைகள் அறிமுகப்படுத்தப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

புதிய அமைச்சரின் இந்த அதிரடி அறிவிப்பு டாஸ்மாக் ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.