சென்னையின் அடையாளங்களில் ஒன்றாக விளங்கும் புனித ஜார்ஜ் கோட்டையில் அமைந்துள்ள தலைமைச் செயலக வளாகத்திற்கு அவர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அரசு அலுவலகங்களின் செயல்பாடு, பராமரிப்பு வசதிகள் மற்றும் நிர்வாக சூழல் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
ஆய்வின்போது பல்வேறு துறைகளின் அலுவலகங்களையும் சுற்றிப்பார்த்த அவர், பணியாளர்களுடன் கலந்துரையாடியதாக கூறப்படுகிறது. இதனால் கோட்டை வளாகம் முழுவதும் பரபரப்பான சூழல் நிலவியது.
இதனைத் தொடர்ந்து, இந்தியாவின் பழமையான ஆங்கில தேவாலயங்களில் ஒன்றாக கருதப்படும் வரலாற்றுச் சிறப்புமிக்க புனித மேரி தேவாலயத்திற்கும் அவர் சென்றார். தேவாலயத்தின் பாரம்பரிய கட்டிடக்கலை மற்றும் அதன் வரலாற்று முக்கியத்துவம் குறித்து ஆர்வமாக கேட்டறிந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரசு நிர்வாக ஆய்வும், பாரம்பரிய சின்னங்களின் பார்வையும் இணைந்த இந்த நிகழ்வு அரசியல் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கவனம் ஈர்த்துள்ளது.


