அரசியல்

கடைசி நேரத்தில் கமலிக்கு அடித்த ஜாக்பாட்.. சத்தியபாமாவுக்கு ஷாக்?

top-news

தமிழக அமைச்சரவை விரிவாக்கத்தில் கடைசி நேரத்தில் நடந்த அதிரடி மாற்றம் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவிநாசி தொகுதி எம்.எல்.ஏ கமலி, இன்று காலை 7 மணி வரை கூட தாம் அமைச்சரவையில் இடம்பெறுவோம் என எதிர்பார்க்கவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.


அமைச்சரவை பட்டியல் இறுதி செய்யப்படும் வரை சத்தியபாமாவின் பெயரே தீவிர பரிசீலனையில் இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் கடைசி கட்ட ஆலோசனையில் திடீர் திருப்பம் ஏற்பட்டதுடன், கமலியின் பெயர் இறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த முடிவு தவெக கட்சிக்குள் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக, பெண்கள் மற்றும் இளம் தலைமுறைக்கு முக்கியத்துவம் அளிக்கும் நோக்கில்தான் இந்த மாற்றம் செய்யப்பட்டதாக கட்சி தரப்பில் தகவல்கள் கசிந்துள்ளன.

“கடைசி நிமிட அரசியல் கணக்கே இந்த மாற்றத்திற்கு காரணம்” என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும், கமலிக்கு வழங்கப்பட்ட இந்த வாய்ப்பு, கொங்கு மண்டல அரசியலில் தவெக தனது பிடியை வலுப்படுத்தும் முயற்சியாகவும் பார்க்கப்படுகிறது.

இதனால், அமைச்சரவை பட்டியல் வெளியாகிய சில மணி நேரங்களிலேயே கட்சிக்குள் புதிய விவாதங்கள் கிளம்பியுள்ளன.