அரசியல்

“சென்னைக்கு 2 அமைச்சர்.. ஆனால் VS பாபுவுக்கு நோ சான்ஸ்!”.. விஜய் எடுத்த முடிவால் கட்சியில் சலசலப்பு

top-news

தமிழக அமைச்சரவை விரிவாக்கத்தில் சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த 2 எம்.எல்.ஏக்களுக்கு அமைச்சர் பதவி வழங்கியுள்ள முதலமைச்சர் விஜய், முக்கிய நிர்வாகிகளில் ஒருவராக கருதப்பட்ட VS பாபுவுக்கு வாய்ப்பு அளிக்காதது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கட்சியின் ஆரம்ப கட்ட வளர்ச்சியிலிருந்து முக்கிய பங்காற்றியதாக கூறப்படும் VS பாபு, இந்த முறை அமைச்சரவையில் இடம்பெறுவார் என எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் இறுதி பட்டியலில் அவரது பெயர் இல்லாதது கட்சி நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்கள் மத்தியில் அதிருப்தியை கிளப்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மறுபுறம், சென்னை நகரத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் இரண்டு இளம் எம்.எல்.ஏக்களுக்கு அமைச்சரவை வாய்ப்பு வழங்கப்பட்டிருப்பது, நகர்ப்புற அரசியலில் புதிய தலைமுறையை முன்னிறுத்தும் முயற்சியாக பார்க்கப்படுகிறது.

“செயல்பாடு, மக்கள் தொடர்பு மற்றும் எதிர்கால அரசியல் கணக்கு அடிப்படையில்தான் இந்த தேர்வு நடந்துள்ளது” என தவெக வட்டாரங்கள் விளக்கம் அளித்தாலும், VS பாபுவை புறக்கணித்ததற்கான உண்மையான காரணம் குறித்து பல்வேறு யூகங்கள் அரசியல் அரங்கில் பேசப்பட்டு வருகின்றன.

அமைச்சரவை விரிவாக்கத்தை தொடர்ந்து, கட்சிக்குள் புதிய அதிகார மையங்கள் உருவாகிறதா என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது.