அரசியல்

தவெக அமைச்சரவையில் அதிமுகவுக்கு இடமா? தரவு கொடுத்த கூட்டணி கட்சிகள் அதிருப்தி!

top-news

விஜய் தலைமையிலான தவெக பெரும்பான்மை இல்லாத சூழலில், காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள், ஐயுஎம்எல் மற்றும் விசிக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு வழங்கியிருந்தன. இந்த அரசியல் சமன்பாடு தற்போது புதிய சர்ச்சையை உருவாக்கியுள்ளது.


சட்டமன்றத்தில் ஆதரவு தெரிவித்த அதிமுகவின் ஒரு பிரிவுக்கு தவெக அமைச்சரவையில் முக்கிய இடம் வழங்கப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தகவல் கூட்டணி கட்சிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக இடதுசாரிகள் மற்றும் தொல். திருமாவளவன் தலைமையிலான விசிக தரப்பில் “ஆதரவு வழங்கிய கட்சிகளின் உணர்வுகளை மதிக்க வேண்டியது அவசியம்” என்ற கருத்து முன்வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

“அரசியல் நிலைத்தன்மைக்காக எடுக்கப்படும் முடிவா? அல்லது புதிய கூட்டணி அரசியலுக்கான சிக்னலா?” என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது. இதற்கிடையில், தவெக தரப்பு அதிகாரப்பூர்வ விளக்கம் அளிக்காமல் அமைதியாக இருப்பதும் அரசியல் பரபரப்பை மேலும் அதிகரித்துள்ளது.

தமிழக அரசியலில் கூட்டணி கணக்குகள் நாளுக்கு நாள் மாறிக் கொண்டிருக்கும் நிலையில், இந்த விவகாரம் அடுத்த கட்ட அரசியல் மாற்றங்களுக்கு வழிவகுக்குமா என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது