அரசியல்

முதலமைச்சர் சந்திப்பு ‘ரீல்ஸ்’ ஆனது எப்படி? கோட்டையை கலக்கிய மாஸ் வீடியோ.. அதிகாரிகள் ஷாக்!

top-news

மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் சமூக ஆர்வலர் டாக்டர் பி. சிம்மச்சந்திரன் ஆகியோர் நேற்று முதலமைச்சரை அவரது அலுவலகத்தில் சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினர். கோரிக்கைகளை மிக கவனமாகக் கேட்ட முதலமைச்சர், சம்பந்தப்பட்ட கோப்புகளை நேரில் பார்த்து அதிகாரிகளிடம் விளக்கங்களும் கேட்டதாக தகவல்கள் வெளியாகின.


பொதுவாக இதுபோன்ற சந்திப்புகள் அரசு நடைமுறையின் ஒரு பகுதியாக அமைதியாக முடிவடையும். ஆனால், இந்த முறை கதை வேற மாதிரி திரும்பியுள்ளது. சந்திப்பின் சில காட்சிகள் பின்னணி இசை, சினிமா ஸ்டைல் எடிட்டிங் மற்றும் ‘மாஸ்’ டோனில் சமூக வலைதளங்களில் ரீல்ஸாக வெளியானதும், அந்த வீடியோ வைரலாக பரவ தொடங்கியது.

“அரசு அலுவலக சந்திப்பா… இல்லை அரசியல் டீசரா?” என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பும் அளவுக்கு அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது. குறிப்பாக முதலமைச்சர் கோப்புகளை புரட்டிப் பார்க்கும் காட்சிகள், ஸ்லோ மோஷன் மற்றும் பின்னணி இசையுடன் வெளியானது அதிக கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்த வீடியோ வெளியீடு கோட்டை அதிகாரிகள் மத்தியில் சற்றே அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. “அரசு நிகழ்வுகள் சினிமா பாணியில் பிரசாரம் செய்யப்பட வேண்டுமா?” என்ற விவாதமும் தற்போது எழுந்துள்ளது.

அதே நேரத்தில், ஆதரவாளர்கள் இதை “மக்களிடம் நேரடியாக சென்றடையும் புதிய அரசியல் கம்யூனிகேஷன்” என வரவேற்று வருகின்றனர். ஒரு சாதாரண சந்திப்பு, சமூக வலைதளங்களில் ‘மாஸ் மோமென்ட்’ ஆக மாறியிருப்பது தற்போது அரசியல் வட்டாரத்தில் ஹாட் டாப்பிக்காகியுள்ளது