தமிழக அரசியலில் மீண்டும் வார்த்தை மோதல் வெடித்துள்ளது.
அனிதா ராதாகிருஷ்ணன், ஆதவ் அர்ஜுனா குறித்து கடுமையான கருத்துகளை வெளியிட்டதாக தகவல்கள் வெளியாகி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்செந்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசியதாக கூறப்படும் அனிதா ராதாகிருஷ்ணன், “தைரியம் இருந்தால் நேராக திருச்செந்தூருக்கு வா” என சவால் விடுத்ததுடன், ஆதவ் அர்ஜுனாவை ஒருமையில் குறிப்பிட்டு கடுமையாக விமர்சித்ததாக கூறப்படுகிறது.
இந்த பேச்சு சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வரும் நிலையில், திமுக மற்றும் எதிர்க்கட்சியினரிடையே கடும் விவாதம் எழுந்துள்ளது. சிலர் இதை அரசியல் ஆவேச பேச்சு எனக் கூற, மற்றொரு தரப்பு “ஒரு மூத்த தலைவர் இப்படிப் பேசலாமா?” என்ற கேள்வியையும் எழுப்பி வருகின்றனர்.
அரசியல் சூழல் நாளுக்கு நாள் சூடுபிடித்து வரும் நிலையில், இந்த புதிய வார்த்தை மோதல் தமிழக அரசியலில் மேலும் பரபரப்பை கூட்டியுள்ளது.


