தமிழகத்தில் விஜய் தலைமையிலான புதிய அரசு பதவியேற்றதிலிருந்து பல்வேறு அரசியல் மாற்றங்கள் வேகமெடுத்து வரும் நிலையில், நடிகரும் அரசியல்வாதியுமான பவன் கல்யாண் வெளியிட்டதாக கூறப்படும் கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
“விஜய் முதல்வராக ஆனதிலிருந்து எனக்கு தொடர்ந்து அழுத்தங்கள் கொடுக்கப்படுகின்றன. சில விஷயங்களில் பேச கூட சிரமமான சூழல் உருவாகியுள்ளது” என அவர் வேதனையுடன் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், அரசியல் மற்றும் சினிமா வட்டாரங்களில் உருவாகியுள்ள புதிய சக்தி சமநிலைகள் காரணமாக பல்வேறு தரப்பிலிருந்து மறைமுக அழுத்தங்கள் வருவதாகவும் அவர் குறிப்பிட்டதாக கூறப்படுகிறது. இந்த தகவல் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வரும் நிலையில், ரசிகர்கள் மற்றும் அரசியல் ஆதரவாளர்கள் மத்தியில் விவாதம் சூடுபிடித்துள்ளது.
இதற்கிடையில், பவன் கல்யாணின் இந்த கருத்து நேரடியாக யாரை குறிக்கிறது என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஆனால், இந்த விவகாரம் குறித்து அதிகாரப்பூர்வ விளக்கம் எதுவும் வெளியாகாததால் அரசியல் அரங்கில் பல்வேறு ஊகங்கள் கிளம்பியுள்ளன


