தமிழக அரசியலில் புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ள முதல்வர் விஜய் தலைமையிலான அரசு, தற்போது அமைச்சர்களுக்கான துறை ஒதுக்கீட்டில் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முதல்வராக பதவியேற்ற உடனேயே மக்கள் நல திட்டங்கள், நிர்வாக மாற்றங்கள், அவசர கோப்புகள் உள்ளிட்டவற்றில் கவனம் செலுத்தியுள்ள விஜய், அடுத்த கட்டமாக அமைச்சர்களுக்கு முக்கிய துறைகளை ஒதுக்க உள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக நிதி, உள்துறை, கல்வி, மின்சாரம், தொழில் வளர்ச்சி போன்ற முக்கிய துறைகள் யாருக்கு செல்லும் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரங்களில் அதிகரித்துள்ளது.
மேலும் கூட்டணி கட்சிகளுக்கும் முக்கிய அமைச்சுப் பொறுப்புகள் வழங்கப்படலாம் என்ற பேச்சு நிலவி வருகிறது. இதனால் அதிகார மையங்களில் பரபரப்பு சூழல் உருவாகியுள்ளது.
அரசு வட்டார தகவல்களின் படி, அடுத்த 24 முதல் 48 மணி நேரத்திற்குள் முழுமையான அமைச்சரவை துறை ஒதுக்கீட்டு பட்டியல் வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இதற்காக தலைமைச் செயலகத்தில் தொடர் ஆலோசனைகள் நடைபெற்று வருவதாகவும் தகவல்.
“யாருக்கு எந்த துறை?” என்ற கேள்வியே தற்போது தமிழ்நாடு அரசியலின் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது.


