தமிழகத்தில் பெண்களுக்கான முக்கிய நலத்திட்டமாக கருதப்படும் மகளிர் உரிமைத் தொகை திட்டம், ஆட்சி மாற்றத்திற்குப் பிறகும் தொடர்வது பொதுமக்களிடையே கவனம் பெற்றுள்ளது.
முன்னாள் திமுக அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த திட்டத்தின் கீழ், மாதந்தோறும் தகுதியான பெண்களின் வங்கி கணக்கில் ₹1000 வழங்கப்பட்டு வந்தது. தற்போது தமிழக வெற்றி கழகம் ஆட்சிக்கு வந்த பின்னரும், அதேபோல் இந்த மாதத்திற்கான ₹1000 தொகை பெண்களின் கணக்கில் இன்று வரவு வைக்கப்பட்டுள்ளது.
“அரசியல் மாறலாம்... ஆனால் மக்கள் நலத் திட்டங்கள் நிற்காது” என்ற அணுகுமுறையுடன் அரசு செயல்படுவதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. குறிப்பாக பெண்கள் மத்தியில் இந்த நடவடிக்கை வரவேற்பைப் பெற்றுள்ளது.
சமூக வலைதளங்களிலும் “₹1000 தொடர்கிறது” என்ற தகவல் வேகமாக பரவி வருகிறது. தேர்தல் காலத்தில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்திருந்த நிலையில், திட்டம் தொடர்வது அரசின் முக்கிய அறிவிப்பாக பார்க்கப்படுகிறது.


