அரசியல்

நேரு உள்விளையாட்டு அரங்கில் விஜய்... இன்னும் சில நொடிகளில் பதவியேற்பு விழா!

top-news

தமிழக அரசியல் வரலாற்றில் கவனம் குவிக்கும் தருணமாக, விஜய் தற்போது நேரு உள்விளையாட்டு வளாகத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்னும் சில நொடிகளில் பதவியேற்பு நிகழ்ச்சி தொடங்கவுள்ளதால், அங்கு பரபரப்பான சூழல் நிலவுகிறது.

அரங்கம் முழுவதும் ஆதரவாளர்கள், முக்கிய பிரமுகர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் திரண்டுள்ளனர். பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில், விழா மேடை இறுதிக்கட்ட தயார் நிலையில் உள்ளது.

விஜய்.வருகையுடன், அரங்கம் முழுவதும் உற்சாக கோஷங்கள் முழங்கியதாக கூறப்படுகிறது. ரசிகர்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.
இந்த பதவியேற்பு நிகழ்வு தமிழக அரசியலில் புதிய அத்தியாயமாக பார்க்கப்படுகிறது. இளைஞர்கள் மத்தியில் பெரும் ஆதரவை பெற்றுள்ள விஜய். அடுத்தகட்ட அரசியல் பயணத்தை எப்படி வடிவமைப்பார் என்பது கவனிக்கப்படுகிறது.

இன்னும் சில நொடிகளில் நடைபெறவுள்ள இந்த விழா, மாநில அரசியலின் திசையை மாற்றுமா என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ளது.