தமிழக அரசியல் வட்டாரத்தில் புதிய விவாதத்தை கிளப்பும் வகையில், தவெக அணியின் அணுகுமுறை குறித்து கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. குறிப்பாக ஆட்சி அமைக்கும் சூழலில், அரசியல் அனுபவமின்மை காரணமாக முக்கிய வாய்ப்பை தவறவிட்டதாக பேசப்படுகிறது.
அரசியல் விமர்சகர்கள் கூறுவதாவது, இதே நிலைமையில் தி.மு.க இருந்திருந்தால், ஆளுநர் மாளிகையை சுற்றி அரசியல் நாடகம் நடத்தி நேரத்தை வீணடித்திருக்காது என்பதே. சட்டரீதியான மற்றும் அரசியல் ரீதியான அடுத்த கட்ட நகர்வுகளை உடனடியாக மேற்கொண்டிருக்கும் என அவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
107 இடங்களை கைப்பற்றிய “மிகப்பெரிய ஒற்றைக் கட்சி” என்ற பலத்தை முன்வைத்து, முதலில் ஆட்சி அமைக்க அழைப்பு வரவில்லை என்றால், மறுமுறை நேரடியாக நீதிமன்றத்தை நாடி உரிமைக்காக போராடியிருப்பார்கள் என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
மாறாக, தவெக தரப்பில் முடிவெடுப்பதில் தாமதம் ஏற்பட்டதா, அல்லது அரசியல் கணக்கு தவறிவிட்டதா என்ற கேள்விகள் எழுந்துள்ளன. ஆளுநர் சந்திப்பு, ஆலோசனை, காத்திருப்பு என நேரம் சென்ற நிலையில், அரசியல் முன்னிலை கைமாறியதாக சிலர் விமர்சிக்கின்றனர்.
தவெக கட்சி அடுத்தகட்டத்தில் எப்படி செயல்படும், அனுபவ அரசியலை எதிர்கொள்ள என்ன திட்டம் வகுக்கும் என்பது தற்போது முக்கிய கவனமாக மாறியுள்ளது.
தமிழக அரசியலில் எண்ணிக்கை மட்டும் போதாது... தந்திரமும் தேவை என்பதை இந்த சம்பவம் மீண்டும் நினைவூட்டியுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.


